ADDED : ஜூன் 02, 2025 01:15 AM
திருக்கனுார்: தனியார் கம்பெனி பெண் ஊழியர், வயிற்று வலி காரணமாக துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு மேற்கு வீதியை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மனைவி மகாலட்சுமி, 36; திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 30ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகாலட்சுமி, வயிற்று வலி, மயக்கமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது கணவர் அருள்முருகன், மருத்துவமனைக்கு அழைத்தபோது, மகாலட்சுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் மகாலட்சுமி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.