/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேர்தல் பொறுப்பாளராக சுரானா நியமனம் பா.ஜ., சென்டிமென்ட் கைகொடுக்குமா?தேர்தல் பொறுப்பாளராக சுரானா நியமனம் பா.ஜ., சென்டிமென்ட் கைகொடுக்குமா?
தேர்தல் பொறுப்பாளராக சுரானா நியமனம் பா.ஜ., சென்டிமென்ட் கைகொடுக்குமா?
தேர்தல் பொறுப்பாளராக சுரானா நியமனம் பா.ஜ., சென்டிமென்ட் கைகொடுக்குமா?
தேர்தல் பொறுப்பாளராக சுரானா நியமனம் பா.ஜ., சென்டிமென்ட் கைகொடுக்குமா?
ADDED : ஜன 28, 2024 04:33 AM

புதுச்சேரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், விட்டு தர என்.ஆர். காங்கிரசும், போட்டியிட பா.ஜ.,வும் முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், புதுச்சேரிக்கான பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்தார். பா.ஜ., நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
'கிளை மட்டத்தில் தேர்தல் பணிகளை முடுக்கி விட வேண்டும், மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களையும், மாநில பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணி அரசின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும்' என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
வேட்பாளர் யார் என்பது குறித்து நிர்வாகிகள் சிலர், சுரானாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வேட்பாளரை கட்சி மேலிடம்அறிவிக்கும் என்றும், அது அனைவருக்கும் ஆச்சரியம் தரும் என்றும் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு பல்வேறு ரகசிய ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் பணிகளை பா.ஜ., நிர்வாகிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரியிலேயே மாதக்கணக்கில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த சென்டிமென்ட் காரணமாகவே, லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.