/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம் பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
பிளஸ் 2க்கு பிறகு எங்கு, என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்

என்ன படிக்கலாம்
பிளஸ் 2வுக்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வி திருவிழாவில், கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள், தொழில் துறை வல்லுநர்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
அட்மிஷன் நடைமுறை
உயர்கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பினை அள்ளித் தரும் துறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.
நிபுணர்கள் ஆலோசனை
சிவில் சர்வீசஸ், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு துறைகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.
நுழைவு தேர்வு
மேலும், நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், கிளாட், நாட்டா, கேட் போன்ற நுழைவு தேர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்து விளக்கப்படும்.
அரங்கங்கள்
நிகழ்ச்சியில் பொறியியல், கலை, மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியர், பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.
அசத்தலான பரிசுகள்
கருத்தரங்க அமர்வுகளில், மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் என அசத்தலான பரிசுகள் வழங்கப்படும்.
எதிர்கால படிப்புகள்
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது. இதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்தரங்கில் விளக்கப்பட உள்ளது.