/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காய்கறி விலை கண்ணை கட்டுதே...உழவர் சந்தையில் உள்ளடி வேலை காய்கறி விலை கண்ணை கட்டுதே...உழவர் சந்தையில் உள்ளடி வேலை
காய்கறி விலை கண்ணை கட்டுதே...உழவர் சந்தையில் உள்ளடி வேலை
காய்கறி விலை கண்ணை கட்டுதே...உழவர் சந்தையில் உள்ளடி வேலை
காய்கறி விலை கண்ணை கட்டுதே...உழவர் சந்தையில் உள்ளடி வேலை
UPDATED : மே 25, 2025 07:22 AM
ADDED : மே 24, 2025 11:15 PM

உழவர் சந்தையில், தாறுமாறாக விலை நிர்ணயம் செய்வதால், விற்பனை குறைந்து வருவது வேளாண் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், புதுச்சேரி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உழவர் சந்தையை கொண்டு வந்தார். இதன் நோக்கம் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வது. அதன்மூலம், விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும். பொதுமக்களுக்கும் காய்கறிகள் விலை குறைவாக கிடைக்கும் என்பதே.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில், தற்போது, இந்த உழவர் சந்தையில் 136 பேருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாௌான்று ஒரு கடைக்கு 20 ரூபாயும், எலக்ட்ரானிக் எடை இயந்திரத்துக்கு ரூ.40 பெறப்படுகிறது. இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு நாள்தோறும் உழவர் சந்தை அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்து அறிவித்த பின்பு பொருட்களை விற்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் பெரிய மார்க்கெட்டை விட 20 சதவீதம் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்ததால் நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு காய்கறிகள் விற்பனை நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த காங். ஆட்சி காலத்தில், உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் உழவர் சந்தையில் காய்கறி விலை, பெரிய மார்க்கெட்டை விட கூடுதலாக விற்கப்படுகிறது. பல விவசாயிகள், பெரிய மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து உழவர் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
அதிக விலை காரணமாக நாள்தோறும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், சந்தைக்கு வருவதையும் புறக்கணிப்பதால் காய்கறிகளின் விற்பனையும் பல மடங்கு குறைந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், உழவர்சந்தை மூடும் நிலைக்கு தள்ளப்படுவது நிதர்சனம்.