/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமியின் தனிப்பட்ட படங்களை வௌியிட்ட மேற்குவங்க வாலிபர் கைது சிறுமியின் தனிப்பட்ட படங்களை வௌியிட்ட மேற்குவங்க வாலிபர் கைது
சிறுமியின் தனிப்பட்ட படங்களை வௌியிட்ட மேற்குவங்க வாலிபர் கைது
சிறுமியின் தனிப்பட்ட படங்களை வௌியிட்ட மேற்குவங்க வாலிபர் கைது
சிறுமியின் தனிப்பட்ட படங்களை வௌியிட்ட மேற்குவங்க வாலிபர் கைது
ADDED : ஜூலை 02, 2025 08:21 AM

புதுச்சேரி; புதுச்சேரி தனியார் நிறு வனத்தில் பணியாற்றும் நபர் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை, மர்ம நபர் வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரப்பி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.
அதில், சிறுமியின் தனிப்பட்ட (ஆபாச) புகைப் படங்களை பதிவிட்டவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக், 39; என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஒடிசாவில் பதுங்கி இருந்த அவரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையி லான வினோத் குமார், ராஜ்குமார் அடங்கிய தனிப்படை யினர் பாலாசூர் பஸ் நிலையத்தில் கைது செய்தனர்.
பின்னர், புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், பிரகாஷ் நாயக்கிற்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், ஓடிசா மாநிலத்திற்கு சென்று, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனை ஆய்வு செய்தபோது, பல பெண்களுடைய அந்தரங்க புகைப்படங்களும், வீடியோகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களுடன் அவர் பேசும் போது, தனக்கு இன்னும் திருமணமாக வில்லை. மிகப்பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன் என வித விதமாக போட்டோ ஷாப்பில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய டி.பி.,யாக வைத்து மயக்கியுள்ளார்.
அவருடன் பழகிய பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்கும் போது, அதனை வீடியோ எடுத்தும், அவர்கள் அனுப்பிய வீடியோ மற்றும் போட்டோக்களை வைத்தும் நிறைய பெண்களை மிரட்டி வந்துள்ளார்.
பிரகாஷ் நாயக், இன்ஸ்டாகிராமை சோதனை செய்தபோது, 35க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேசி, அவர்களுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாங்கி இருப்பதும், புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சிறுமியுடன் தனிமையில் இருந்த போது எடுத்து சேமித்து வைத் திருந்ததும் தெரியவந்தது.
இதுபோன்ற போக்சோ வழக்குகளில் ஆண் போலீஸ் அதிகாரிகளை கொண்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் சைபர் போலீசில் பணியாற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் பிரகாஷ் நாயக்கை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பின், அவர்களே போக்சோ கோர்ட் சிறப்பு நீதிபதி சுமதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.