/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பானலிங்கத்திற்கு இன்று வரவேற்பு 108 பானலிங்கத்திற்கு இன்று வரவேற்பு
108 பானலிங்கத்திற்கு இன்று வரவேற்பு
108 பானலிங்கத்திற்கு இன்று வரவேற்பு
108 பானலிங்கத்திற்கு இன்று வரவேற்பு
ADDED : மே 12, 2025 02:15 AM
வில்லியனுார்: திருக்காஞ்சி கோவிலுக்கு காசியில் இருந்து வருகை தரும் 108 பானலிங்கத்திற்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் 108 அடி உயரத்தில் மனோன்மணி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்திக்கு தனி கோவிலுடன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு காசியில் இருந்து வருகை தரும் 108 பானலிங்கத்திற்கு இன்று (12ம் தேதி) மாலை 4:30 மணியளவில் வரவேற்பு விழா நடக்கிறது.
கோரிமேடு நுழைவு வாயில் பகுதியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் 108 பானலிங்கங்களை பூர்ண கும்பமரியாதையுடன் மலர் துாவி வரவேற்கப்பட உள்ளது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.