ADDED : மே 17, 2025 12:16 AM
நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதி, நெட்டப்பாக்கம், வேல்முருகன் நகர் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் விநியோக குழாய் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், பொதுசுகாதார கோட்ட செயற் பொறியாளர் கெஜலட்சுமி, உதவிப்பொறியார் பீனாராணி, இளநிலைப்பொறியாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.