Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடைபிடித்து எங்கள் தெருக்களில் நடப்பதா... புதுச்சேரியில் வெடித்த இடங்கை - வலங்கை உரசல்

குடைபிடித்து எங்கள் தெருக்களில் நடப்பதா... புதுச்சேரியில் வெடித்த இடங்கை - வலங்கை உரசல்

குடைபிடித்து எங்கள் தெருக்களில் நடப்பதா... புதுச்சேரியில் வெடித்த இடங்கை - வலங்கை உரசல்

குடைபிடித்து எங்கள் தெருக்களில் நடப்பதா... புதுச்சேரியில் வெடித்த இடங்கை - வலங்கை உரசல்

ADDED : செப் 21, 2025 05:31 AM


Google News
புதுச்சேரி வரலாற்றில் 1788 ஜனவரி 14ம் தேதி ரொம்ப முக்கியமான நாள். அன்று பொங்கல் என்பது ஸ்பெஷல். பொங்கலை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்க, பிரெஞ்சியர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய திருவேங்கடப்பிள்ளை, கவர்னரை பொடி நடையாய் போய் சந்திக்க முடிவு செய்தார். முக்கிய பிரமுகர்களை கூட்டிக்கொண்டு மேளதாளங்கள முழங்க போய் சந்தித்து பேசினார்.

அவர்கள் திரும்பும்போது, பொன்னப்ப செட்டி மகனும், அழகிய மணவாள செட்டி மகனும் ஆளுக்கொரு பட்டுக்குடை பிடித்தப்படி வந்தனர். இவர்கள் இடங்கையர் பிரிவினர். அவர்கள் வலங்கையர் பிரிவினர் வசிக்கும் தெருவில் வரும்போது குடைபிடித்தல் பழக்கம் அக்காலத்தில் கிடையாது.

இந்த சம்பவம் வலங்கை பிரிவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொங்கல் திருநாள் என்பதால் அன்று மட்டும் அமைதி காத்த வலங்கையர் பிரிவினர் மறுநாள் சாலையில் ஒன்று திரண்டனர். திருவேங்கடப்பிள்ளையிடம் சென்று முறையிட்டனர். அப்படியே இந்த விஷயத்தை கவர்னரிடம் கொண்டு சென்றனர்.

இதை கேள்விப்பட்ட கவர்னர் டென்ஷன் அடைந்தார். குடை பிடித்தப்படி நடந்து சென்ற இடங்கை பிரிவினர் இருவரையும் சிறையில் அடைத்துவிட்டார். இதை கேள்விப்பட்ட இடங்கை பிரிவினர், இருவரையும் அன்றைய தினமே விடுலை செய்ய எவ்வளவோ முயற்சி எடுத்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இருவரும் விடுதலை செய்யப்படவில்லை. மறுநாள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்த குடைகள் மட்டும் தான் கைக்கு கிடைத்தது. ஒருவழியாாக சமதானமடைந்து அவற்றை வாங்கி சென்றனர்.

இந்த சம்பவத்தினால் வலங்கை - இடங்கை பிரிவினர் இடையே பதட்டமும் நிலவியது. இரண்டு வாரம் உருண்டோடிய நிலையில் 27ம் தேதி கவர்னர் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

இறுதியில் ஒரு கண்டிப்பான உத்தரவினையும் போட்டார். இடங்கை - வலங்கை பிரிவினரும் இருவரும் அவரவர் தெருக்களில் மட்டும் குடை பிடித்தப்படி நடந்து செல்ல வேண்டும். அடுத்தவர் தெருக்களில் குடை பிடித்துக் கொண்டு நடந்து செல்லக் கூடாது.

ஆனால் வெள்ளைக்கார தெருவில் இருதரப்பினரும் குடை பிடித்து நடந்து செல்லலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அரசின் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே வேறொருவர் குடை பிடிக்கலாம். மற்றவர்கள் தங்களுக்கு தாங்கள் மட்டுமே குடை பிடித்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இடங்கை மற்றும் வலங்கை என்பவை தமிழகத்தின் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய சமூகப் பிரிவுகளாகும்.

இவை விவசாயம், கைவினைப் பொருள்கள் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்ட சாதிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தன.

வலங்கை வலது கை பிரிவு என்றும், இடங்கை இடது கை பிரிவு என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பிரிவு பிற்காலங்களில் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஆங்கிலேயேர்கள் போன்றே இந்தியர்களின் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களில் பிரெஞ்சியர்கள் தலையிடுவதில்லை என கொள்கை முடிவுடன் இருந்தனர்.

அரசின் செல்வாக்கு பொருத்தவரை வலங்கை பிரிவினரே அதிகம் பெற்றிருந்தனர். அரசின் சலுகைகளும் அவர்களுக்கு தான் கிடைத்தது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us