/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'வாக்கி டாக்கி' மாயம் நாடகமாடிய போலீஸ் 'வாக்கி டாக்கி' மாயம் நாடகமாடிய போலீஸ்
'வாக்கி டாக்கி' மாயம் நாடகமாடிய போலீஸ்
'வாக்கி டாக்கி' மாயம் நாடகமாடிய போலீஸ்
'வாக்கி டாக்கி' மாயம் நாடகமாடிய போலீஸ்
ADDED : ஜன 07, 2024 05:01 AM
புதுச்சேரி கட்டுப்பாட்டு அறை, ஒயர்லெஸ் பிரிவில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன், நள்ளிரவு நேரத்தில் வாக்கி டாக்கி ஒன்று மாயமானது. அங்குள்ள சி.சி.டி.வி., கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2:00 மணிக்கு ஒயர்லெஸ் பிரிவுக்குள் வரும் மர்ம நபர், வாக்கி டாக்கியை துாக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இது தொடர்பாக செய்திகள் வெளியானது.பணியில் இருந்த போலீசார் யார் மீது வழக்கு பதிவாகும் என்ற பீதியில் இருந்தனர்.
மறுநாளே வாக்கி டாக்கி குப்பையில் கிடந்ததாக, போலீஸ் அதிகாரி அதை கொண்டு வந்து அலுவலகத்தில் வைத்தார்.ஒயர்லெஸ் பிரிவில் பணியாற்றும் சில போலீசாரை மிரட்ட திட்டமிட்ட அதிகாரி ஒருவர், வாக்கி டாக்கியை மர்ம நபர் மூலம் எடுக்க வைத்து மறைத்து வைத்திருந்ததாக, பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதால், குப்பையில் கிடந்ததாக நாடகமாடி உள்ளார் என, ஒயர்லெஸ் போலீசார் புலம்பி வருகின்றனர்.