/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி திடீர் மாயம்போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி திடீர் மாயம்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி திடீர் மாயம்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி திடீர் மாயம்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி திடீர் மாயம்
ADDED : ஜன 04, 2024 03:31 AM
புதுச்சேரி; புதுச்சேரி கட்டுப்பாட்டு அறை வயர்லெஸ் பிரிவில் வாக்கி டாக்கி மாயமானது.
புதுச்சேரி, கோரிமேட்டு போலீஸ் மைதானம் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 3வது மாடியில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை ஒயர்லெஸ் பிரிவில், எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் கன்ட்ரோல் ரூம், மத்திய கட்டுப்பாட்டு அறை என இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப சாதனங்களை பாதுகாக்க கட்டுப்பாட்டு அறை முழுதும் ஏ.சி., வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏ.சி., கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழுதானது.
இவற்றை சரிசெய்யாததால், அலுவலகத்திற்குள் காற்று உள்ளே வருவதற்காக கட்டுப்பாட்டு அறையின் கதவுகள் திறந்து வைத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கட்டுப்பாட்டு அறையில் இருந்த, மேற்கு மற்றும் தெற்கு சரக பகுதிகளை இணைக்கும் சேனல் 2 பிரிவு வாக்கி டாக்கி மாயமானது.
அறையில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2:30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்குள் புகும் மர்ம நபர், வாக்கி டாக்கியை துாக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
மாயமான வாக்கி டாக்கி சமூக விரோதிகள் கையில் சிக்கினால், சட்டம் ஒழுங்கு மற்றும் மாநில பாதுகாப்பு தொடர்பான போலீசாரின் அனைத்து ரகசிய தகவல்கள், ரேடியோ அலைவரிசைகள் லீக் ஆனால் சமூக விரோத செயல்கள் அரங்கேர வாய்ப்பு உள்ளது.
இதனால் போலீசிடம் புகார் ஏதும் அளிக்காமல், மாயமான வாக்கி டாக்கியை ரகசியமாக தேடும் பணியில் வயர்லெஸ் பிரிவு ஈடுப்பட்டுள்ளது.