/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூன் 09, 2025 04:57 AM

புதுச்சேரி : விழுப்புரம், அண்ணா அரசு கலை கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தது.
விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 1992 -95ம் ஆண்டில், பி.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, புதுச்சேரி அடுத்த பூரணாங்குப்பம் லே பாண்டி தனியார் ரிசார்ட்டில் நடந்தது.
கல்லுாரியில் படித்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து 5ம் ஆண்டு நடத்திய இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர், பெங்களுரு போன்ற வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, நண்பர்கள் ஒன்று கூடி கலந்துரையாடி, கடந்து சென்ற சந்தோஷ நினைவுகளை பார்க்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் ஒரு ஆண்டு காத்து கிடக்கிறோம் என, நெகிழ்ச்சியுடன் பேசினர்.