Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரை வெட்டி கொல்ல முயன்றவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் மறியல்

வாலிபரை வெட்டி கொல்ல முயன்றவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் மறியல்

வாலிபரை வெட்டி கொல்ல முயன்றவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் மறியல்

வாலிபரை வெட்டி கொல்ல முயன்றவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் மறியல்

ADDED : ஜூன் 15, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துாரில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கரையாம்புத்துார், பாகூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மதன், 24; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:35 மணியளவில், அதே பகுதியில் உள்ள ரெஸ்ட்டோ பாரில்மது குடித்துக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மதனை, அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து விட்டு கரையாம்புத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மதனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடம் தமிழகம் - புதுச்சேரி எல்லைப்பகுதி என்பதால் இருமாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசைாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரையாம்புத்தூர் பகுதியில் நடந்த திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நடந்த கரகாட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்விரோதத்தில்,எதிர் தரப்பினர் மதனை கொலை செய்ய முயற்சி செய்திருக்காலாம் என, தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதனை வெட்டி கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மதனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை 6:00 மணியளவில் கரையாபுத்துார் பஸ் நிலையம் நான்கு முனை சந்திப்பு பகுதியில்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் எஸ்.பி., பக்தவச்சலம், பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., வானதுணை சபாநாயகர் ராஜவேலு பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழக போலீசாருடன், இணைந்து குற்வாளிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தவிட்டுள்ளதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். அதையேற்று சாலை மறியலை கைவிட்டனர்.

கடைகள் மூடல்

மதனை வெட்டிய நபர்களை கைத செய்ய வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அங்குள்ள கடைகளை சிலர் உடைத்தனர். இதையடுத்து கரையாம்புத்துாரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us