/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேதபாராயண நிறைவு நிகழ்ச்சி வேதபண்டிதர்கள் கவுரவிப்புவேதபாராயண நிறைவு நிகழ்ச்சி வேதபண்டிதர்கள் கவுரவிப்பு
வேதபாராயண நிறைவு நிகழ்ச்சி வேதபண்டிதர்கள் கவுரவிப்பு
வேதபாராயண நிறைவு நிகழ்ச்சி வேதபண்டிதர்கள் கவுரவிப்பு
வேதபாராயண நிறைவு நிகழ்ச்சி வேதபண்டிதர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 04, 2024 03:21 AM

புதுச்சேரி: கிருத்திகா மண்டல வேதபாராயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வேதபண்டிதர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் 45 நாட்களாக கிருத்திகா மண்டல வேதபாராயணம் நடத்தப்பட்டு வந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சி, புதுச்சேரி கிருஷ்ணா நகரிலுள்ள சின்மயா ஹாலில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர் வாசுதேவன், வேதபண்டிதர்களை கவுரவித்தார். விழாவில் அவர் பேசுகையில், 'வேத சப்தம் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் கேட்பவரின் எண்ணங்களை துாய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருப்பதை பல விஞ்ஞான ஆய்வுகள் நிருபித்துள்ளன. பழங்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த பாரம்பரியத்தை புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதிகடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறது. இது பாராட்டுக்குரியது' என்றார்.
ஏற்பாடுகளை சமிதியின் தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் ரவி, துணை தலைவர் சீதாராமன், ரகோத்தமன், நிகழ்ச்சி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.