Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாணிதாசன் பிறந்த நாள் விழா

வாணிதாசன் பிறந்த நாள் விழா

வாணிதாசன் பிறந்த நாள் விழா

வாணிதாசன் பிறந்த நாள் விழா

வாணிதாசன் பிறந்த நாள் விழா

ADDED : அக் 07, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வாணிதாசன் கலை இலக்கிய பேரவை சார்பில், கவிஞர் வாணிதாசனின் 110வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.

மாலிறையன் தலைமை தாங்கினார். ஜானகிராமன் வரவேற்றார். மருத்துவர் வழுதி தொடக்க உரை ஆற்றினார்.

பேரவை தலைவர் வளர்மதி, செயலாளர் முருகன், கால்நடை மருத்துவர் தமிழ்க்குமரன், ஆசிரியர் அருள்நந்தினி முன்னிலை வகித்தனர். வளர்மதி தொகுத்த வாணிதாசனின் தீந்தமிழ் அமுதம் என்ற நுாலை சபாநாயகர் செல்வம் வெளியிட, பேராசிரியர் நாகலிங்கம் பெற்றுக் கொண்டார்.

வாணிதாசனின் சுயசரிதை நுாலை, மாலிறையன் வெளியிட புலவர் தேவராசு பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், 20 தமிழறிஞர்களுக்கு வாணிதாசன் விருது, சிறந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேராசிரியர் குழந்தைவேலனார், கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், சுந்தரபழனியப்பன் உட்பட பேரவை நிர்வாகிகள், தமிழரிஞர்கள், புலவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருவேலன் நன்றி கூறினார்.