ADDED : செப் 15, 2025 02:10 AM
பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு கோகுல கிருஷ்ணன் சுவாமி கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி நேற்று உறியடி உற்சவம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு கண்ணபிரானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்டவற்றால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜனை, தொடர்ந்து, உறியடி உற்சவம் நடந்தது. திரளான சிறுவர்கள் உறியடித்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன் உறியடி அலங்காரத்தில் வீதியுலா சென்று அருள்பாலித்தார்.