/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2025 08:02 AM
புதுச்சேரி : ஆசிரியர் சங்கங்களி டம் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாசலம், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, பொதுச்செயலாளர் பாலகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
2013ல் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன், இருந்த அனைத்து ஆசிரியர்களுமே மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களே. மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட காரணத்தினால் தரமான கல்வி மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் நமது திறமையான ஆசிரியர்களின் முயற்சியால் தான் அதிகப்படியான தேர்ச்சி சதவீதத்தை எட்ட முடிந்தது.
தற்போது ஆசிரியர் தகுதி தேர்வினை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என, திடீரென இப்போது கூறுவது ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே புதுச்சேரி அரசு மத்திய அரசினை அணுகி தீர்ப்பின் பாதக விஷயங்களை எடுத்துக் கூறி ஆசிரியர்களுக்கு பாதகமான, நடைமுறைக்கு ஒத்து வராத சுப்ரீம்கோர்ட் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.