/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் இரண்டு நாள் குறைதீர்ப்பு முகாம்காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் இரண்டு நாள் குறைதீர்ப்பு முகாம்
காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் இரண்டு நாள் குறைதீர்ப்பு முகாம்
காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் இரண்டு நாள் குறைதீர்ப்பு முகாம்
காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் இரண்டு நாள் குறைதீர்ப்பு முகாம்
ADDED : பிப் 06, 2024 04:22 AM
புதுச்சேரி, : புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில் நாளை 7 மற்றும் 16ம் தேதி ஆகிய இரு நாட்களில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. முகாம், மதியம் 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள் தங்களுடைய இ.எஸ்.ஐ., சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, தக்க ஆவணங்களுடன், முகாமில் சமர்ப்பிக்கலாம். கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.