அரியாங்குப்பம் : கடற்கரை பகுதியில் ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் ரூபி கடற்கரையில், இரு வாலிபர்கள் மது போதையில், பொதுமக்களிடம் ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அரியாங்குப்பம் போலீசார் அங்கு சென்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், பண்ருட்டி, தட்டாப்பாளையத்தை சேர்ந்த திருமலை, 23; நவீன், 23; என்பது தெரியவந்தது. இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.