/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூன் 16, 2025 01:16 AM
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மாரியம்மனம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 38. இவர், தவளக்கப்பம் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்.
இந்த பங்கிற்கு நேற்று அதிகாலை வந்த கடலுார், பெரியகாட்டுப்பாளையம் சரண், 18; வேல்ராம்பட்டு நெல்வின், 25, ஆகியோர் தங்களது பைக்கிற்கு அவர்களாகவே, பெட்ரோல் நிரப்பினர். இதை தட்டிக்கேட்ட துரையை இருவரும் சரமாரியாக தாக்கினர்.
சக ஊழியர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.