ADDED : மார் 24, 2025 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதார இயக்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் கோவிந்தராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கம்பன் கலையரங்கத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி புஸ்சி வீதி வழியாக சென்று கடற்கரை சாலையில் முடிவடைந்தது.
இதில், இந்திரா காந்தி மருத்துவக்கல்லுாரி, அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனம், தனியார் மருத்துவக்கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, காசநோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதன் அறிகுறிகள், காசநோய் பரவும் முறை, அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை காசநோய் மருத்துவ அதிகாரி சந்திரசேகரன், தகவல் தொடர்பு அதிகாரி மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.