ADDED : மார் 22, 2025 09:29 PM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிராமப்புற செவிலியர் தனலட்சுமி வரவேற்றார். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி நுாதன்சபரிஷ் காச நோயின் முதன்மையான அறிகுறிகள், பரிசோசனை முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
காசநோய் தடுப்பு கிராமப்புற செவிலியர் வெண்ணிலா காச நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவியாளர் சிவக்குமார் நன்றி கூறினார். காசநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் சித்ரா, சுதா, ராஜலட்சுமி, சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆஷா ஊழியர் விருதாம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.