Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலை.,யில் முப்பெரும் விழா

புதுச்சேரி பல்கலை.,யில் முப்பெரும் விழா

புதுச்சேரி பல்கலை.,யில் முப்பெரும் விழா

புதுச்சேரி பல்கலை.,யில் முப்பெரும் விழா

ADDED : மே 29, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி அரங்கம் திறப்பு விழா, மரக்கன்று நடும் பணி, மாணவர் நல வளர்ச்சி துவக்கம் என முப்பெரும் விழா நடந்தது.

அரங்கத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புரோக்டோரியல் குழுவை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவர் நல புலமுதன்மையர் வெங்கடராவ் பேசுகையில், '1985ம் ஆண்டு சட்டத்தின் கீழ் புரோக்டோரியல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்கலைக்கழகம் விரிவாக வளர்ச்சியடைந்து புதிய பாடப்பிரிவுகளைச் சேர்க்கும் நிலையில் இயற்கை நீதி, கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறும். இதற்காக ஒழுங்கு வாரியம் அமைக்கப்படுவது முக்கியமானது. இந்த வாரியத்தில் சிறுபான்மையினர், பெண்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

துணைவேந்தர் பேசுகையில், 'இந்த அம்சம், மாணவர்களிடையே தங்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் தங்கள் கல்லுாரிக் கால நினைவுகளை பிம்பமாகப் பதிந்து வைத்துக் கொள்ளும் முக்கிய வாய்ப்பாக இது அமைகிறது. பல்கலைக்கழக உள்கட்டமைப்பில் மூன்று முக்கிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை, குறிப்பாக இணைப்பாடத்திட்டங்கள் சார்ந்த நடவடிக்கைகளில், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும்' என்றார்.

மாணவர்கள் திறந்த வெளி அரங்கை சுற்றி மரக்கன்றுகள் நட்டனர். பல்கலைக்கழக இயக்குனர் (கல்வி) தரணிக்கரசு, பேராசிரியர் க்ளெமென்ட் சகயராதா லொர்ட்ஸ், கலாசார இயக்குநர் ரஜ்னீஷ் பூட்டானி, பதிவாளர் விஜய் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேராசிரியர் சிபி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us