ADDED : ஜூன் 12, 2025 11:13 PM

அரியாங்குப்பம்: அபிஷேகபாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறை திறப்பு விழா, சமுக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் வழங்கும் விழா, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் என முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கம்ப்யூட்டர் அறையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கினார். இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு தனது சொந்த செலவில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.