/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : செப் 03, 2025 09:00 AM

புதுச்சேரி; தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில், மரக்கிளைகள் கிடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, பாண்டெக்ஸ் அலுவலகம் பின்புறம், 3வது மெயின் ரோட்டில், வெட்டப்பட்ட மரக்கிளைகள் காய்ந்த நிலையில், பல நாட்களாக சாலையில் கிடக்கிறது.
இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், மரக்கிளைகள் காய்ந்த நிலையில் உள்ளதால், சிகரெட் பிடித்து விட்டு நெருப்பை போட்டால், தீ விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
பெரியளவில் விபத்து, ஏற்படுவதற்குள், ஊழியர்கள், உடனடியாக, மரக்கிளைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.