Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாண் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி முகாம்

வேளாண் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி முகாம்

வேளாண் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி முகாம்

வேளாண் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி முகாம்

ADDED : பிப் 27, 2024 06:57 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : உறுவையாறில் வேளாண்துறை சார்பில் நவீன வேளாண்மையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் வில்லியனுார் உருவையாறு சாய்பாபா கோவிலில் நவீன வேளாண்மையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார்.

வில்லியனுார் கோட்டம் வேளாண் இணை இயக்குனர் அமரஜோதி தலைமை தாங்கினார். காரைக்கால் பஜன்கோ கல்லுாரி உளவியல் துறை வல்லுனர் மோகன், நவீன வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பேசினார்.

முகாமில் வில்லியனுார், திருக்காஞ்சி மற்றும் ஒதியம்பட்டு ஆகிய உழவர் உதவி இயக்கத்தை சார்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஜெகதீசன் சவுந்தரராஜன், மகாலிங்கம், ஆறுமுகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் செய்தனர்.