Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ஜனாதிபதி வருகை இன்றும் போக்குவரத்து மாற்றம்

துணை ஜனாதிபதி வருகை இன்றும் போக்குவரத்து மாற்றம்

துணை ஜனாதிபதி வருகை இன்றும் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜூன் 17, 2025 07:57 AM

Follow on Google

ADDED : ஜூன் 17, 2025 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரிக்கு வந்துள்ள துணை ஜனாதிபதியின்பயணத்தையொட்டி, நகரப் பகுதியில் இன்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதிவிடுத்துள்ளசெய்திக்குறிப்பு:

புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளதுணை ஜனாதிபதியின் இன்றைய பயணத்தையொட்டி, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி பயணத்தின் போது, எந்த வாகனங்களும் வழியில் செல்ல அனுமதிக்கப்படாது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினர் மாளிகை அருகில் உள்ள புஸ்சி வீதியில் உள்ள செஞ்சி சாலை சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை சந்திப்புவரை வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

இன்று 17ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணிவரை, கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் சந்திப்பு (தமிழ்நாடு) வழியாக திருப்பி விடப்பட்டு திண்டிவனம் சாலையை அடைந்து பின்னர் கோரிமேடு வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும்.

பிற வாகனங்கள் காலாப்பட்டு-மாத்துார் சாலை சந்திப்பு வழியாக திண்டிவனம் சாலையை அடைந்து கோரிமேடு செல்ல வேண்டும்.

பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் இருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

மேலும், நகரப்பகுதியான கடற்கரை சாலை, துமாஸ் வீதி, செயின்ட் லுாயிஸ் வீதி, செஞ்சி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை, மணக்குள விநாயகர் கோவில் வீதி, ரங்கப்பிள்ளை வீதி முதல் டூப்ளக்ஸ் வீதி வரை உள்ள சாலைகள், தேவைக்கேற்ப வாகனம் இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

பொதுமக்கள்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விதிமுறைகளை பின்பற்றவும், இந்த சாலைகளை பயன்படுத்துவதை தவிர்த்திடவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us