தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
ADDED : மே 13, 2025 11:37 PM

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கத்தில், 'வைகாசியில் பிறந்த வள்ளுவர்' விழா கருத்தரங்கம், விருது வழங்குதல் மற்றும் நுால் வெளியீடு என, முப்பெரும் விழா நடந்திது.
விழாவில் சபாநாயகர் செல்வம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., செண்பகராமன் உறவினர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் சுஜாதா வரவேற்றார். காரைக்கால் ராஜலட்சுமி, சென்னை புஷ்பலதா, திருவண்ணாமலை சித்ரா, புவனகிரி ஷர்மிளா, கரூர் கனகலட்சுமி, சென்னை கவுரி, மதுரை பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கலைவரதன் மற்றும் கலைவாணி கணேசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இயக்கத்தின் பொறுப்பாளர்கள் வெற்றிவேலன், பத்மநாபன், நமச்சிவாயம், கலைவாணிசதீசு, கிருஷ்ணா, திவ்யாராமன், புவனா வேல்விழி, பச்சையம்மாள், ரத்தின விநாயகம், அமர்ஜோதி, சுதர்சனம், சத்தியமூர்த்தி, கயல்விழி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.