/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடையணம்திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடையணம்
திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடையணம்
திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடையணம்
திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடையணம்
ADDED : பிப் 24, 2024 06:41 AM

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றி பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஆன்மிக நடையணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6:00 மணியளவில் நடந்த மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா, வெங்கடேசன், பாலசுப்ரமணிய குருக்கள் ஆகியோர் ஆன்மிக நடைபயணத்தை துவக்கி வைத்து நடந்து சென்றனர்.
புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.