/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
பாகூர் மூலநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : ஜூன் 19, 2025 04:23 AM

பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவிலில் உள்ள கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.