ADDED : பிப் 11, 2024 02:43 AM
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார், வி.மணவெளி, தண்டுகரை வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், 41; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மதியம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, ஒதியம்பட்டு லுார்து மாதா வணிக வளாகத்தில் விழுந்து கிடந்தார்.
தகவல் கிடைத்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.