Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

ADDED : மார் 16, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; திண்டிவனம் சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப் பெருமாள், மாசி மக கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்க கடந்த 13ம் தேதி புதுச்சேரி வந்தார். எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி மடம் சாரதாம்பாள் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

14ம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய சுவாமிக்கு, அம்பலத்தாடையார் மடத்து வீதி வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாசப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப் பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டி கவுரவத் தலைவர் வீரா வேங்கடேச ராமானுஜதாசர், உபதலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் சிவானந்தம், செயற்குழு உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்ட கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று காலை 10:00 மணிக்கு, உலக நன்மைக்காக மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us