/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொடரும் திருட்டு சம்பவங்கள் தவளக்குப்பம் மக்கள் அச்சம்தொடரும் திருட்டு சம்பவங்கள் தவளக்குப்பம் மக்கள் அச்சம்
தொடரும் திருட்டு சம்பவங்கள் தவளக்குப்பம் மக்கள் அச்சம்
தொடரும் திருட்டு சம்பவங்கள் தவளக்குப்பம் மக்கள் அச்சம்
தொடரும் திருட்டு சம்பவங்கள் தவளக்குப்பம் மக்கள் அச்சம்
ADDED : ஜன 10, 2024 10:58 PM
அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கத்தில் வீட்டு சாமான்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம், அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் இளவரசு, 50; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒப்பந்த ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வெளியில் இருந்து பித்தளை சாமான்கள், வீடு கட்டுமான பொருட்கள் காணாமல் போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 70 ஆயிரம் ஆகும்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.