/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுாரில் மட்டும் விதிவிலக்குபேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுாரில் மட்டும் விதிவிலக்கு
பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுாரில் மட்டும் விதிவிலக்கு
பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுாரில் மட்டும் விதிவிலக்கு
பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு வில்லியனுாரில் மட்டும் விதிவிலக்கு
ADDED : ஜன 08, 2024 04:48 AM
புதுச்சேரி: வில்லியனுாரில் போக்குவரத்திற்கு இடையூறாக வைத்துள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு அடுத்தப்படியாக வளரும் நகரமாக வில்லியனுார் மாறி வருகிறது. அரசு அலுவலகங்கள், கொம்யூன் பஞ்சாயத்து, பத்திர பதிவு என ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. அதையும் மீறி பேனர் வைத்தால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அடிக்கடி பேனர் அகற்றப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு வில்லியனுாருக்கு மட்டும் விதிவிலக்காக உள்ளது.வில்லியனுாரில் 2 அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் உள்ளனர். இதுதவிர எம்.எல்.ஏ., கனவுடன் ஏராளமான ரியல் எஸ்டேட் அதிபர்கள் வலம் வந்து கொண்டுள்ளனர்.அரசியல் பிரமுகர்களுக்கு பிறந்த நாள், கட்சி தலைவர் பிறந்த நாள், மாநாடு, திருமணம் என எது நடந்தாலும், வில்லியனுார் போலீஸ் நிலையம், கொம்யூன் அலுவலகம், வருவாயத்துறை அலுவலகத்தின் வாசலிலேயே பேனர்களை வரிசையாக கட்டி வைக்கின்றனர்.
அரும்பார்த்தபுரம் மேம்பாலம், வி.மணவெளி, சுல்தான்பேட்டை,வில்லியனுார் பைபாஸ் சாலை வரை சாலையோரம் உள்ள மின் கம்பங்களில் நுாற்றுக்கணக்கான பேனர்கள் கட்டுகின்றனர்.
இவற்றால் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை. மின் கம்பத்தில் கட்டும் பேனர்களால், மின்கம்பம் அசைந்து அடிக்கடி மின் விளக்குகள் பழுதாகி விடுகின்றன. உடனே மின்துறை செலவில் பழுது பார்த்து புதிய மின் விளக்கு பொருத்தும் செயல் வழக்கமாக நடந்து வருகிறது. யாரோ ஒருவர் யாருக்கோ வைக்கும் பேனரால் பழுதாகும் மின் விளக்குகளை மக்கள் வரிப்பணம் செலவு செய்ய வேண்டுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மின் விளக்கு பழுதானால், சரி செய்ய பேனர் வைத்தவரிடம் பணம் வசூலிக்க வேண்டும்.
தடையை மீறி வைக்கப்படும் பேனர்களால், வில்லியனுார், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, வில்லியனுார் வி.மணவெளி, சுல்தான்பேட்டை, பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் வைத்துள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.