/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடையில் டீ குடித்தபடி குறைகளை கேட்ட அமைச்சர் கடையில் டீ குடித்தபடி குறைகளை கேட்ட அமைச்சர்
கடையில் டீ குடித்தபடி குறைகளை கேட்ட அமைச்சர்
கடையில் டீ குடித்தபடி குறைகளை கேட்ட அமைச்சர்
கடையில் டீ குடித்தபடி குறைகளை கேட்ட அமைச்சர்
ADDED : செப் 11, 2025 03:10 AM

புதுச்சேரி: திருக்கனுார் கடை வீதியில், கடையில் டீ குடித்தபடி பொதுமக்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் குறைகளை கேட்டறிந்தார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்தநாளை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, திருக்கனுார் கடைவீதியில் சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து டீ குடித்தபடி, அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அது தொடர்பான அதிகாரிகளை மொபைலில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார். பா.ஜ., பிரமுகர் முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.