/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மல்லுக்கட்டுக்கு தயாராகும் மண்ணாடிப்பட்டு தொகுதி மல்லுக்கட்டுக்கு தயாராகும் மண்ணாடிப்பட்டு தொகுதி
மல்லுக்கட்டுக்கு தயாராகும் மண்ணாடிப்பட்டு தொகுதி
மல்லுக்கட்டுக்கு தயாராகும் மண்ணாடிப்பட்டு தொகுதி
மல்லுக்கட்டுக்கு தயாராகும் மண்ணாடிப்பட்டு தொகுதி
ADDED : ஜூன் 22, 2025 01:53 AM
மண்ணாடிப்பட்டு தொகுதியில், புதுச்சேரி அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய காங்., கட்சி சார்பில், கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட ராஜாராம் வெற்றி பெற்றார். அடுத்து 1996ல் நடந்த தேர்தலில் காங்., தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த வந்த 5 தேர்தல்களிலும் காங்., கட்சி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிடு செய்து வருகிறது.
அதில், 2001 தேர்தலில் காங்., கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்று, சபாநாயகரானார். அடுத்து வந்த 2006 தேர்தலில் காங்., கூட்டணியில் பா.ம.க., அருள்முருகன் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும், கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க., தோல்வி அடைந்தது.
கடந்த 5 தேர்தலில்களில் தொடர்ந்து போட்டியிடாததால், காங்., நிர்வாகிகள் சோர்வடைந்தனர். இந்நிலையில் கடந்த தேர்தலில், காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ., வில் இணைந்த நமச்சிவாயம் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி, பெற்று அமைச்சராகி உள்ளார். அவரே, வரும் 2026 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை துவங்கியுள்ளார். இதனால், இனி வாய்ப்பே இல்லை என, தொகுதி காங்., நிர்வாகிகள் விரக்தியின் உச்சிக்கே சென்றனர்.
இதனை அறிந்த காங்., தலைமை, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தொகுதி தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் முதல்வர் நாராயணசாமியை நியமித்துள்ளது.
இதனால் வரும் தேர்தலில் தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதால், நிர்வாகிகள் கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.
மேலும், தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமியே இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதால், மண்ணாடிப்பட்டுக்கு முதல்வர் தொகுதி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளதால் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.
அரசியலில் வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நமச்சிவாயமும், நாராயணசாமியும் நேரடியாக மல்லுக்கட்ட தயாராகி உள்ளதால், மண்ணாடிப்பட்டு தொகுதியில் தற்போதே அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.