/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிறப்பு, இறப்பு சான்றிதழின் வடிவம் மாறுகிறது: இனி, பெற்றோர் ஆதார் எண்கள் இடம் பெறும் பிறப்பு, இறப்பு சான்றிதழின் வடிவம் மாறுகிறது: இனி, பெற்றோர் ஆதார் எண்கள் இடம் பெறும்
பிறப்பு, இறப்பு சான்றிதழின் வடிவம் மாறுகிறது: இனி, பெற்றோர் ஆதார் எண்கள் இடம் பெறும்
பிறப்பு, இறப்பு சான்றிதழின் வடிவம் மாறுகிறது: இனி, பெற்றோர் ஆதார் எண்கள் இடம் பெறும்
பிறப்பு, இறப்பு சான்றிதழின் வடிவம் மாறுகிறது: இனி, பெற்றோர் ஆதார் எண்கள் இடம் பெறும்
ADDED : மே 24, 2025 12:00 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தில் வழங்கப்படும் பிறப்பு இறப்பு சான்றிதழ்களில்புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், பிறந்த இடம் அல்லது இறந்த இடம், பதிவு எண், நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் இச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால், இனிவரும் காலங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடும் வகையில், புதுச்சேரி உள்ளாட்சி துறை பிறப்பு, இறப்பு விதிமுறைகளை திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து பிறப்பை பதியும் போது பெற்றோரின் ஆதார் எண்ணையும், இறப்பை பதியும்போது இறந்தவர் ஆதார் எண்ணுடன் அவரது தாய், தந்தையர் அல்லது கணவன் அல்லது மனைவியின் ஆதார் எண்ணையும் சேகரிக்க புதுச்சேரி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே 100 சதவீதம் ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏதும் இருக்காது.
பிறப்பு, இறப்பினை பதிவு செய்யும்போது ஆதார் நகல், தகவல்கள் கோரப்படுகின்றன. ஆனால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும்போது ஆதார் எண் குறிப்பிட்டு வழங்கப்படுவதில்லை. இனி, புதுச்சேரியில் நகராட்சி கொம்யூன் பஞ்சாய்த்து மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தாய், தந்தை பெயர்கள் ஆதார் எண்ணுடன் கட்டாயமாக இடம் பெறுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்களும் ரெடியாகி விட்டன.
இதன் தொடர்ச்சியாக ஆதார் எண் குறிப்பிடும் வகையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான படிவங்களை அச்சடிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் விரைவில் ஈடுபட உள்ளன.
குழந்தை பெயர் பதிவு
இதேபோல் குழந்தை பெயர் பதிவு முறையில் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும் 30 நாட்களுக்குள் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தினை ஆவணங்களுடன் அணுகி பதிவு செய்யலாம்.
குழந்தை பெயரை பதிவு செய்ய 30 நாட்கள் முதல் ஓராண்டு வரை காலதாமதம் ஆகிவிட்டால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வழியாக உள்ளாட்சி துறை இயக்குநருக்கு கோப்பு அனுப்பி பிறப்பு பதிவு செய்யலாம். ஓராண்டிற்கு மேல் என்றால் சப் கலெக்டரை அணுகி உத்தரவு பெற வேண்டும். அந்த உத்தரவினை மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் கொண்டு சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்ய வேண்டும். புதிய நடைமுறையின்படி மாவட்ட கலெக்டர், செயலர் நடுவராக உள்ள தாசில்தார் கூட இனி குழந்தை பெயரை பதிவு செய்ய உத்தரவு போடலாம்.
இந்த இரண்டு நடைமுறைகளிலும் உள்ளாட்சி துறை வாயிலாக விரைவில் புதுச்சேரியில் அமலாகிறது.