/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுாரில் மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி கைதுவில்லியனுாரில் மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி கைது
வில்லியனுாரில் மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி கைது
வில்லியனுாரில் மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி கைது
வில்லியனுாரில் மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி கைது
ADDED : ஜன 07, 2024 05:07 AM

புதுச்சேரி: வில்லியனுாரில் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36; அதே பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது தொழிற்சாலைக்கு வந்த, காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு சேர்ந்த ரவுடி சுகன், 32; சென்னை ரவுடி சரத் ஆகியோர் வெங்கடேசனிடம் மாமூல் கேட்டு மிரட்டினர்.
தர மறுத்ததால் வெங்கடேசனை சரமாரியாக தாக்கினர். சரத் டிரவுசர் பாக்கெட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து வீச முயன்றபோது தவறி கீழே விழுந்து பயங்கர சத்ததுடன் வெடித்தது.
இதில் வெங்கடேசன் மற்றும் ரவுடிகள் சுகன், சரத் காயமடைந்தனர். சுகன், சரத் அங்கிருந்து தப்பினர். வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர்.
வெடிகுண்டு வீச்சில் காலில் காயத்துடன் காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரவுடி சுகனை வில்லியனுார் போலீசார் நேற்று கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.