/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா தனட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா
தனட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா
தனட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா
தனட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 01, 2025 04:34 AM

புதுச்சேரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நிறுவனங்களின் செயலர் நீலராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பேசினார்.
கவுரவ விருந்தினர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அழகுசுந்தரம் வாழ்த்தி பேசினார்.
விழாவில், பல்கலைக் கழக வேந்தர் சீனுவாசன் பேசுகையில், 'வேளாண்மை என்பது உயிரின் தாய் மொழி. மனிதனின் வாழ்க்கை மண்ணில் தான் பிறந்தது. அதன் மீது விழும் ஒவ்வொரு கண்ணீரும், ஒவ்வொரு வியர்வையும் தான் இந்த உலகுக்கு இன்று வரை உணவு அளித்து வருகிறது. மரத்தின் வேர்கள் மேலே தெரிவதில்லை. அதைப் போலவே, விவசாயிகளின் உழைப்பும் உலகுக்கு புரிவதில்லை. வேரை இழந்தால் மரம் இருக்காது; விவசாயிகளை இழந்தால் இந்த சமூகம் இருக்காது என்பதை நாம் புரிந்துகொண்டு விவசாயிகளை மதிக்க வேண்டும். இன்றைய வேளாண்மை என்பது தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவியல் ஆகும். இந்த நவீன உலகில் இவை அனைத்தும் ஒவ்வொரு விவசாயிக்கும் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். விவசாயிகள் அனைவரையும் நவீன தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும். நீங்கள்தான் அந்த மாற்றத்தை உருவாக்கும் வீரர்கள்' என்றார்.
விழாவில், கல்லுாரி முதல்வர், துணை முதல்வர், புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.