ADDED : பிப் 12, 2024 06:33 AM

நெட்டப்பாக்கம் : மடுகரை அடுத்த அட்பிசம்பாளையம் வாலை மனோன்மணி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ - பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடந்தது.காலை 9:00 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், அட்பிசம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.