/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் உண்டியல் உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை கோவில் உண்டியல் உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
கோவில் உண்டியல் உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
கோவில் உண்டியல் உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
கோவில் உண்டியல் உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : செப் 02, 2025 03:26 AM

காரைக்கால்: காரைக்காலில் சியாமளா தேவி அம்மன் கோவிலில் வெள்ளி சூலம் மற்றும் உண்டியல் காணிக்கையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் அம்பாள்சமுத்திரத்தில் பழமை வாய்ந்த சியாமளா தேவி அம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபி ேஷகம் நடந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் உண்டியல் மற்றும் அம்மன் கையில் உள்ள வெள்ளி சூலம் மற்றும் சி.சி.டி.வி.,யின் டி.வி.ஆர்., பாக்ஸ் திருடு போயிருந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் நிரவி இன்ஸ்பெக்டர் கிரிஸ்டின்பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.