/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சிபழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சி
பழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சி
பழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சி
பழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 04:44 AM

புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பழமொழி சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள் என்ற நிகழ்ச்சி, பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் கோ பாரதி தலைமை தாங்கினார்.
செயலாளர் வள்ளி, கிருஷ்ணகுமார், பேராசிராசிரியர் விசாலாட்சி, ரமேஷ் பைரவி, மீனாட்சிதேவி, சரசுவதி, லட்சுமிதேவி, தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் மதன் வரவேற்றார்.
கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார்.
பேராசிரியர் அரங்க முருகையன், திருவள்ளுவரும், விவேகானந்தரும் என்ற தலைப்பில் பேசினார்.மறைந்து வரும் பழமொழிகளை நினைவுப்படுத்தும் வகையில், பழமொழி சொல்லுங்கள், பரிசு வெல்லுங்கள் என்ற தலைப்பில் நடந்த போட்டியில் பங்கேற்ற 40 பள்ளி மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் பழமொழி கூறிய 7 மாணவர்களுக்கு ரொக்க பரிசினை சுசீலா வழங்கினார். மாணவி கோமதி நன்றி கூறினார்.