ADDED : ஜன 05, 2024 12:53 AM
புதுச்சேரி : கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி சாலையில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர். அவர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த பார்த்திபன், 29; என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 185 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பார்த்திபனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.