Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

ADDED : பிப் 02, 2024 03:46 AM


Google News
புதுச்சேரி: உழவர்கரை டைமன் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் பவித்தரலட்சுமி, 27. இவரை கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்தரலட்சுமி, கடந்த ஆறு மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பவித்தரலட்சுமிக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் ரெட்டியார்பளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us