/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : பிப் 11, 2024 02:49 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், சிறப்பு வரி வசூல் முகாம் இன்று நடக்கிறது.
உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி மாசிலாமணி செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி மூலம் வீட்டுவரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி இன்று 11ம் தேதி ரெட்டியார்பாளையம், காவேரி நகரில் உள்ள பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வரி வசூல் முகாம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ரெட்டியார்பாளையம், மூகாம்பிகை நகர், உழவர்கரை (தெற்கு), உழவர்கரை (வடக்கு) மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2023--24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தலாம்.
வீட்டுவரி, சொத்துவரி மற்றும் சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி வி.வி.பி. நகர் வீட்டு வரி வசூல் மையம் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி, சேவை வரி நிலுவைதாரர்கள், வரியை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும். ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற இணையதள முகவரியிலும், டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் வரி செலுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.