/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தார் சாலை பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்புதார் சாலை பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
தார் சாலை பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
தார் சாலை பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
தார் சாலை பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2024 03:18 AM

புதுச்சேரி: வில்லியனுார் சட்டசபை தொகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வில்லியனுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வி.மணவெளி, ஆண்டாள் நகரில் உட்புற சாலைகளுக்கு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில், தார் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இப்பணியை எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.