/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழக மாஜி எஸ்.ஐ., யிடம் மோசடி பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வலை தமிழக மாஜி எஸ்.ஐ., யிடம் மோசடி பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வலை
தமிழக மாஜி எஸ்.ஐ., யிடம் மோசடி பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வலை
தமிழக மாஜி எஸ்.ஐ., யிடம் மோசடி பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வலை
தமிழக மாஜி எஸ்.ஐ., யிடம் மோசடி பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வலை
ADDED : ஜூன் 30, 2025 03:04 AM
வில்லியனுார் : சென்னை மாநகர முன்னாள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் பணம் மோசடி செய்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் மோகனன், 61. இவர் சென்னை மாநக போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது மகன் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கரசூரில் உள்ள வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்கில் லாரிக்கு டீசல் போட்டபோது, பங்க் உரிமையாளர் திலகவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பெட்ரோல் பங்க்கை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதனால் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தை சரிபாதியாக பிரித்துகொள்ளலாம் என, கூறியுள்ளார்.
அதனை தனது தந்தை மோகனனிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, மோகனன் முதல் தவணையாக ரூ. 4.23 லட்சத்தை திலகவதிக்கு அனுப்பினார். தொடர்ந்து திலகவதி ஜன., மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதால் தற்போது வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
அதனை தொடர்ந்து மீண்டும் ரூ. 9 லட்சம் என, மொத்தம் ரூ. 13.23 லட்சத்தை பங்க் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். கொடுத்த பணத்திற்கான பங்கு தொகையை கேட்டபோது ரூ. 3:87 லட்சம் மட்டும் திலகவதி வழங்கினார்.
மீதமுள்ள தொகையை பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கொடுப்பதாக மோகனனிடம் தெரிவித்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் போரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, திலகவதியிடம் பெற்ற பணத்தை கொடுத்துவிடுமாறு அறிவுரை கூறி அனுப்பினர்.
ஆனால் திலகவதி பணத்தை தராமல் தனது மகள் மற்றும் சில நபர்களுடன் சேர்ந்து பணம் கொடுக்க முடியாது என, மோகனன் குடும்பத்தாரை மிரட்டி உள்ளனர். மோகனன் புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து திலகவதி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.