ADDED : ஜன 21, 2024 04:25 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் தை மாத கிருத்திகை உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை சிவசுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகர், பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வர் கோவிலில் உள்ள முருகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


