/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கல்பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கல்
ADDED : பிப் 11, 2024 10:33 PM

புதுச்சேரி: கீழூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் அஞ்சலிதேவி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ஸ்டெல்லா, திருகாமேஸ்வரன், ஜெயபிரபா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பளர் முதன்மை கல்வி அலுவலர்தனசெல்வன் நேரு, 110 மாணவர்களுக்கு காலணிகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுகு்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
சமூக ஆர்வலர் தேவகி பாலசுப்ரமணியன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர்கள் ஜாய்ஸ்லிண்டா, வித்யா, ஜான்சி, கவுசல்யா, தேன்மொழி வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஆசிரியர் சுபலட்சுமி நன்றி கூறினார்.