ADDED : பிப் 24, 2024 06:37 AM

திருபுவனை : திருபுவனை தொகுதி யில் உள்ள அரசு பள்ளிகளில் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கி பேசுகையில், 'திருபுவனை தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனது சொந்தசெலவில் இரவு உணவு வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.