Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மக்கள் முதல்வரே தமிழகத்தை ஆள... வா; ரங்கசாமி வீட்டிற்கு படையெடுக்கு ஆதரவாளர்கள்

மக்கள் முதல்வரே தமிழகத்தை ஆள... வா; ரங்கசாமி வீட்டிற்கு படையெடுக்கு ஆதரவாளர்கள்

மக்கள் முதல்வரே தமிழகத்தை ஆள... வா; ரங்கசாமி வீட்டிற்கு படையெடுக்கு ஆதரவாளர்கள்

மக்கள் முதல்வரே தமிழகத்தை ஆள... வா; ரங்கசாமி வீட்டிற்கு படையெடுக்கு ஆதரவாளர்கள்

UPDATED : அக் 19, 2025 07:42 AMADDED : அக் 19, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
முதல்வர் ரங்கசாமி, காங்., கட்சியில் இருந்து வெளியேறி, 2011 பிப்ரவரி 7ம் தேதி அகில இந்திய என்.ஆர்.காங்., கட்சியை துவக்கினார். என். ரங்கசாமி என்ற அவரின் பெயரைக் குறிக்கும் எழுத்துகள் கட்சியின் பெயராக வைத்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், அகில இந்திய நமது ராஜ்ஜியம் என்பதன் சுருக்கமே என்.ஆர்.,காங்., என பதிலடி கொடுத்தார்.

ஆனால், அகில இந்திய கட்சியாக பதிவு செய்துவிட்டு,புதுச்சேரியில் மட்டும் போட்டியிட்டு வருவது, ரங்கசாமிக்கு நீண்ட காலமாக மனதில் கீறலாக இருந்து வருகின்றது. அதனால், தமிழகத்திலும் தன் கட்சியை தடம் பதிக்க செய்ய முதல்வர் ரங்கசாமி திட்டுமிட்டுள்ளார். இதனை அறிந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்து, கட்சி பணிக்காக காத்திருந்தனர்.

தமிழகத்தில் சட்டபை தேர்தல் பிரசாரம் இப்போதே சூடுபிடித்துவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க., காங்., பா.ஜ., த.வெ.க., நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் பல கட்ட பிரசாரத்தை பட்டியலிட்டு, 'ஜெட்' வேகத்தில் போய்கொண்டு இருக்கின்றன. ஆனால் என்.ஆர்.காங்., கட்சி இன்னும் தமிழகத்தில் தேர்தல் பணியை துவங்குவதற்கான எந்த அறிகுறியும் காணோம்.

தமிழக அரசியலில் தடம் பதிக்க முதலில் வேகம் காட்டிய ரங்கசாமி, தற்போது மவுனம் காத்து வருகின்றார்.

இதனால் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்த தமிழக பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன், முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து சீக்கிரமாக தமிழகத்தில் கட்சி பணியை துவங்க வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தை நோக்கி வரும் புயலே... விரைவில் வாரீர், விடியலை தாரீர், மக்கள் தலைவரே தமிழகம் தவமிருக்கின்றது... உங்கள் வரவை நோக்கி.. தமிழகத்தின் விடிவெள்ளியே... எங்களை வழிநடத்த வாரீர்... என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டரை காண்பித்துவருகின்றனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி இருந்தாலும், தமிழகத்தில் யாருடனும் கூட்டணி இல்லை. த.வெ.க., -தலைவர் விஜய்யுடன்முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கம் உள்ளது.

த.வெ.க., ஆரம்பித்தபோது ரங்கசாமியிடம் நடிகர் விஜய் ஆசி பெற்றார். எனவே தமிழகத்தில் என்.ஆர்.காங்., த.வெ.க., கூட்டணி மலர வாய்ப்புள்ளது.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த முதல்வர் ரங்கசாமிக்கு, தமிழகத்தில் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என பல்வேறு வன்னியர் சமுதாய தலைவர்களுடன் சுமூக உறவு உள்ளது.

எனவே தமிழகத்தில் 20 தொகுதி வரை என்.ஆர்.காங்., போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us